ஜனாதிபதி தேர்தலின் போது அதிகளவில் பிரச்சாரங்கள் இடம்பெற்று வந்த சமூக வலைத்தள தேர்தல் பிரச்சாரங்கள், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெகுவாக குறைவடைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் பிரதான மூன்று வேட்பாளர்களுக்கு அதிகளவில் சமூக ஊடக பிரச்சாரங்கள் இடம்பெற்று வந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது நபரொருவருக்கும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் இடம்பெறவில்லை.
இதேவேளை, கட்டணம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகளும் கூட இதுவரையில் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய தரப்பினர் உட்பட வெற்றியடைந்த தரப்பினருக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சமூக வலைத்தள பிரச்சாரங்கள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களின் ஆதரவு அதிகளவில் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.