EnTamil.News
F Y T

ஹமாஸ் தலைவரின் உயிரிழப்பு இஸ்ராயலுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-18)
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார்
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார்

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முக்கிய நபராக சின்வார் அடையாளம் காணப்பட்டார். அந்தத் தாக்குதல்தான் தற்போதைய காஸா போருக்கு வழிவகுத்தது.

பலஸ்தீன ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (18) பதிலளித்துள்ளது.

இது ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்தலாம் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.


அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முக்கிய நபராக சின்வார் அடையாளம் காணப்பட்டார். அந்தத் தாக்குதல்தான் தற்போதைய காஸா போருக்கு வழிவகுத்தது.

42,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவின் ரஃபா பகுதியில் புதன்கிழமை (16) இஸ்ரேலிய தாக்குதலில் 61 வயதான சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹமாஸ் தலைவர் இறப்பதற்கு முன்பு இஸ்ரேலிய ஆளில்லா விமானம் அவருக்கு அருகில் பறந்து கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.