EnTamil.News
F Y T

ஜஸ்டின் ட்ரூடோவிற்கு காலக்கெடு

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-10-25)
ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகள் அதிகரித்தாலும், கட்சிக்கான மாற்றுத் தலைவர் யாரும் அவரை எதிர்க்க முன்வரவில்லை.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, லிபரல் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜஸ்டின் ட்ரூடோ நான்காவது முறையாக பதவிக்கு வருவதை எதிர்த்துள்ளனர்.

அத்துடன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில், எதிர்வரும் 28ஆம் திகதி தனது முடிவை அறிப்பதற்கு லிபரல் கட்சியினர் ட்ரூடோவிற்கு காலக்கெடு விதித்துள்ளனர்.

அடுத்த தேர்தலில் ஏற்படும் தோல்வியை கருத்திற்கொண்டு அவர் பதவி விலக வேண்டும் என சுமார் 20க்கும் மேற்பட்ட லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையெடுத்திட்டுள்ளனர்.

கனடா நாடாளுமன்றத்தில் 153 லிபரல் உறுப்பினர்கள் உள்ளனர், எனினும், பிரதமர் ட்ரூடோவிற்க எதிராக கிளர்ச்சியிக்கு பெருமளவான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை

ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகள் அதிகரித்தாலும், கட்சிக்கான மாற்றுத் தலைவர் யாரும் அவரை எதிர்க்க முன்வரவில்லை.

தற்போதைய நிலையில், ஆளும் கட்சியை விட எதிர்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அண்மையில் நடந்து முடிந்த இரண்டு இடைக்கால தேர்தலில் லிபரல் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தது.

சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை ஆதிக்கம் செலுத்திய லாசால்-எமர்ட்-வெர்டூனின் லிபரல் கட்சி தோல்வியடைந்தது. இது ட்ரூடோ அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து வருவதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலில் போட்டியிடவும் - வெற்றி பெறவும் விரும்புவதாக ட்ரூடோ கூறினார்.

எவ்வாறாயினும், நேற்று (புதன்கிழமை) நடந்த கட்சி உறுப்பினர்கள் உடனான சந்திப்பின் பின்னர், அமைச்சரவையில் உள்ள மூத்த பிரமுகர்கள் பிரதமருக்கு தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர்.

இதனிடையே, பல லிபரல் உறுப்பினர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, கட்சி "வலுவாகவும் ஐக்கியமாகவும்" இருப்பதாகக் ட்ரூடோ தெரிவித்தார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.