ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) உருவப்படத்துடன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட 5,000 ரூபாய் தாள்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 நவம்பர் 11 ஆம் திகதி வரை குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் உருவப்படத்துடன் கூடிய 5000 ரூபாய் போலி நாணயத் தாளின் புகைப்படத்தைப் பரப்பியதாக சந்தேகிக்கப்பட்டே, அவர் நவம்பர் 04 ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், அதுருகிரிய, கொரத்தோட்டை பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் விற்பனையாளராக பணிபுரிபவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.