பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கம் கோதுமை மா, நல்லெண்ணெய் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 190 முதல் 195 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
பேக்கரி பொருட்களின் விலை உயர்வால் ஒரு கிலோ கேக்கின் விலை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவை 150 ரூபாவிற்கு வழங்குவதற்கு கம்பனிகளால் முடியும் எனவும், அந்த விலையில் கோதுமை மாவை வழங்கினால் 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு கிலோ கேக் வழங்க முடியுமெனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.