அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ள குடியரசுகட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது மனைவி மெலானியா உட்பட தனது குடும்பத்தவர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
வெற்றியின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், மெலானியை முதல் பெண்மணி என அழைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மெலானியாவின் நூலை பாராட்டிய டிரம்ப் அமெரிக்காவில் அதிகம் விற்பனையான நூலின் ஆசிரியர் மெலானியா என தெரிவித்துள்ளார்.
அவர் மிகச்சிறந்த பணியாற்றியுள்ளார் மக்களிற்கு உதவுவதற்காக அவர் மிகுந்த பாடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், தனது பிள்ளைகளிற்கும் நன்றி தெரிவித்துள்ளார் .
மேடையில் டிரம்ப் இன் குடும்பத்தினர் காணபட்ட நிலையில் அவர்கள் ஒவ்வொருவரினதும் பெயரை குறிப்பிட்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.