EnTamil.News
F Y T

வெளிநாட்டவரின் வயிற்றில் மறைந்து இருந்த பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் அதிர்ச்சியில் அதிகாரிகள்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-13)
வெளிநாட்டவரின் வயிற்றில் மறைந்து இருந்த பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்  அதிர்ச்சியில் அதிகாரிகள்

ஸ்கேனர் மூலம் பயணியை சோதனை செய்த அதிகாரிகள், அவரது உடலில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்ததாக தகவல் வெளியானது.

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியரா லியோன் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேக நபர் சியரா லியோனின் பிரஜை என்பதுடன், துருக்கி எயார்லைன்ஸ் விமானமான TK 730 இல் நேற்று காலை இஸ்தான்புல் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.


ஸ்கேனர் மூலம் பயணியை சோதனை செய்த அதிகாரிகள், அவரது உடலில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்ததாக தகவல் வெளியானது.


சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் இருந்து கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் 17 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், தனது வயிற்றில் அதிகமான போதைப்பொருள் மாத்திரைகள் இருப்பதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.