காலியில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (13) காலை புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பேருந்து காலி தெற்கற்ற பெண்கள் கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
இந்தநிலையில், வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த வாக்குப்பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.