இன்று இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தம்பானை பழங்குடி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற இலங்கை பழங்குடி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற சம்பவம் இன்று (14) காலை பதிவாகியுள்ளது.
ஆதிவாசியினரின் கலாசாரத்தின் அடையாளமான கோடரியைச் சுமந்துகொண்டு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்ததாகக் கூறி வாக்களிக்க மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , பழங்குடியின துணைத் தலைவர் குடும்பத்துடன் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பழங்குடியின துணைத் தலைவர், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் பழங்குடியினரின் கலாசாரம் பற்றி அறியாத அரச அதிகாரிகளைத் தேர்தல் பணிக்கான மையங்களுக்கு அனுப்புவதைத் தவிருங்கள் என கூறியுள்ளார்.
அதோடு இச்சம்பவம் தன்னை மிகுந்த அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டதாக கூறப்படுகின்றது.