EnTamil.News
F Y T

முல்லைத்தீவில் வேட்பாளர்களின் சின்னங்களை அகற்றிய இராணுவம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-14)
முல்லைத்தீவில் வேட்பாளர்களின் சின்னங்களை அகற்றிய இராணுவம்

அதனை அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அகற்றப்படாமல் இருந்தது.

முல்லைத்தீவில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக பொறிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் என்பன அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை .


அதனை அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அகற்றப்படாமல் இருந்தது.


தொடர்ந்து இன்றையதினம் காலை மீண்டும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததன் பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் குறித்த அடையாளங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.