நுவரெலியாவில் உள்ள பொகவந்தலாவை பகுதியில் இன்றையதினம் தேர்தல் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தலையில் படுகாயங்களுக்கு உள்ளாக ஊடவியலாளர் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் தெரிவித்ததாவது,
பொகவந்தலாவை, கர்கஸ்வோல் தோட்டத்தில் இன்று பிற்பகல் நபரொருவர் தனக்குப் பின்னால் வந்து அருகில் இருந்த கடை ஒன்றிலிருந்து கத்தியால் தலையில் அடித்ததாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வருட பொதுத் தேர்தலில் நுவரெலியாவில் போட்டியிட்ட வேட்பாளரின் ஆதரவாளரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.