EnTamil.News
F Y T

இலங்கை வரலாற்றில் மலையகத்தில் இருந்து 2 பெண் பாராளுமன்ற பிரதிநிதிகள்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-15)
இலங்கை வரலாற்றில் மலையகத்தில் இருந்து 2 பெண் பாராளுமன்ற பிரதிநிதிகள்

கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம் ஆகும்.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம் ஆகும்.

இது மலையக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையை எடுத்துக் காட்டும் முகமாக அமைந்துள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.