EnTamil.News
F Y T

மொட்டுக் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் மட்டக்களப்பில் சம்பவம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-16)
மொட்டுக் கட்சியின்  அலுவலகம் மீது தாக்குதல் மட்டக்களப்பில் சம்பவம்

பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத்தில் போட்டியிட்ட எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் என்பவருக்கு சொந்தமான இந்த அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தாக்குதலில் அலுவலகத்தின் கண்ணாடிகள் முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன், அங்கு கட்டப்பட்டிருந்த விளம்பர பதாதைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி அலுவலகமான்றின் மீது நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலினால் அலுவலகம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதியில் அமைந்திருந்த மேற்படி தேர்தல் அலுவலகத்தின் மீது நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென அலுவலகத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.



பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத்தில் போட்டியிட்ட எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் என்பவருக்கு சொந்தமான இந்த அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

தாக்குதலில் அலுவலகத்தின் கண்ணாடிகள் முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன், அங்கு கட்டப்பட்டிருந்த விளம்பர பதாதைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.


தாக்குதல் நடந்த சம்பவ நேரத்தில் அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை என்பதினால் உயிராபத்துகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.