EnTamil.News
F Y T

பிரபல விடுதியில் வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-16)
பிரபல விடுதியில் வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம்

இதன்போது, தனது அறைக்கு வந்த ஒருவர், தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் பெண் அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள நிலையில் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ரஷ்ய பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 41 வயதான ரஷ்ய பெண் ஒருவர் அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 8ஆம் திகதி வந்து தங்கியிருந்துள்ளார்.



நவம்பர் 12 , வங்கி ஊழியரான குறித்த பெண்ணின் பிறந்த நாள் என்பதல , தனது பிறந்தநாள் தினத்தில் அதிகமாக குடித்து கொண்டாடிவிட்டு விடுதியின் அறையில் உறங்கச் சென்றுள்ளார்.

இதன்போது, தனது அறைக்கு வந்த ஒருவர், தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண் அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள நிலையில் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.