EnTamil.News
F Y T

பெண்களை நிராகரித்த தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-19)
பெண்களை நிராகரித்த தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல்

இந்தநிலையில், குறித்த தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திடம் மாவை சேனாதிராஜா கோரிக்கை முன்வைத்திருந்தார். மேலும், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை பெண் ஒருவருக்கு வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் அந்தக் கட்சியின் அரசியல் குழு அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்தின் பெயர் உள்ளிடப்பட்டுள்ளது.


எனினும், குறைந்த வாக்குகளைப் பெற்ற சத்தியலிங்கத்திற்கு, சுமந்திரனின் செல்வாக்கால் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை, தமிழரசுக் கட்சியில் சத்தியலிங்கத்தை விட அதிகளவான வாக்குகளைப் பெற்ற பல இளையோர்கள் இருக்கும்போது சத்தியலிங்கத்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் பல விமர்சனங்கள் பொது வெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடியது.

இந்தநிலையில், குறித்த தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திடம் மாவை சேனாதிராஜா கோரிக்கை முன்வைத்திருந்தார்.

மேலும், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.


எனினும், கட்சியின் அரசியற் குழு இணைந்து கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு அந்த ஆசனத்தை வழங்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒரு பெண் வேட்பாளருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

குகதாசன், மாவை உள்ளிட்டோர் முன்வைத்த இந்தக் கோரிக்கையை, சி.வி.கே.சிவஞானம், சாணக்கியன் மற்றும் குலநாயகம் உள்ளிட்டோர் எதிர்த்தாகவும் தவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும், இதன் பின்னரான கலந்துரையாடலின் போது சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.