EnTamil.News
F Y T

இனி எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் - கோவிந்தன் கருணாகரம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-19)
இனி எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் - கோவிந்தன் கருணாகரம்

இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன்.

இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த தேர்தலின் போதும் நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்திருந்தேன். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாகவும் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன்.

இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன்.

இதேவேளை, புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது. இது வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.