EnTamil.News
F Y T

வன்னிக்கு தேசிய பட்டியல் ஊடக இன்னும் ஒரு ஆசனம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-19)
வன்னிக்கு  தேசிய பட்டியல் ஊடக இன்னும் ஒரு ஆசனம்

அதன் அடிப்படையில் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் முக்கியஸ்தருமான முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது என்பவருக்கு குறித்த பிரதிநித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்துடன் வன்னி மாவட்டம் 9 நாடாளுமன்ற பிரதிநித்துவங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி (Vanni) தேர்தல் மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக மேலும் ஒரு தேசியபட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க பெற்றுள்ளது.

அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது என்பவருக்கே குறித்த தேசியபட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது இம்முறை பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டதுடன், வன்னி உட்பட ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது.


அந்தவகையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற ஐந்து தேசியபட்டியல் ஆசனத்தில் ஒன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்குவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் முக்கியஸ்தருமான முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது என்பவருக்கு குறித்த பிரதிநித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அவரது நியமனத்துடன் வன்னி மாவட்டம் 9 நாடாளுமன்ற பிரதிநித்துவங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.