முன்னைய விதிகளின்படி நடைமுறையில் இருந்த, ராஜாங்க அமைச்சர் பதவிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கு பதிலாக 26 - 28 துணை அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சில அமைச்சரவை துறைகளுக்கு மாத்திரமே துணை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்,
இந்நிலையில், அது தொடர்பில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் எவ்வாறாயினும், நிதிச் செயலாளராக மகிந்த சிறிவர்தனவைத் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.