யாழ்ப்பாணம் - உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (19-11-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழிலிருந்து நெல்லியடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த வானும் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும், வானில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.