EnTamil.News
F Y T

இலங்கையில் அதிகரித்திருக்கும் மனிதக்கடத்தல் அமெரிக்காவின் அதிர்ச்சி அறிக்கை

நிரோ - 4 வாரங்களிற்க்கு முன்பு (2024-11-23)
US report
US report

மனிதக்கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 95 பேரில்;, 78 பேர் தொழிலாளர் கடத்தலில் இருந்து தப்பியவர்கள், ஒன்பது பேர் பாலியல் கடத்தலில் இருந்து தப்பியவர்கள் மற்றும் எட்டு குறிப்பிடப்படாத வடிவங்களில் இருந்து தப்பியவர்கள் என்றும் அமெரிக்க அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024 மனிதக்கடத்தல் அறிக்கையில், இலங்கையில் மனிதக்கடத்தல் சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 இல் 59 சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியிருந்த நிலையில், 2024 இல் அது 95 சம்பவங்களாக உயர்ந்துள்ளன.

மனிதக்கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 95 பேரில்;, 78 பேர் தொழிலாளர் கடத்தலில் இருந்து தப்பியவர்கள், ஒன்பது பேர் பாலியல் கடத்தலில் இருந்து தப்பியவர்கள் மற்றும் எட்டு குறிப்பிடப்படாத வடிவங்களில் இருந்து தப்பியவர்கள் என்றும் அமெரிக்க அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு பேர் பாகிஸ்தானியர்கள் என்றும் அந்த அமெரிக்க அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், மனிதக்கடத்தல் சம்பவங்களில் பெரும்பாலானவை, மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கியதாகவே இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மனித கடத்தல் பிரிவு முகாமையாளர் என் பி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவரங்கள்;, மூலமே அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் இணையக்குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டவர்களும் இதில் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.