எங்களை அழைத்தால் வடக்கு மாகாணத்திற்கும் சென்று தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலானது ஒரு சவால் மிக்க தேர்தலாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக வடக்கு - கிழக்கில்பெரும் சவாலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு வீட்டு சின்னத்திற்கு ஒரே ஒரு ஆசனம் தான் கிடைக்கும் என பலராலும் பேசப்பட்டது.
பலர் பல அச்சுறுத்தல்களை கொடுத்திருந்தார்கள் மட்டக்களப்பில் நீங்கள் ஒரு சில கொலைகார கட்சிகளை சேர்த்து எடுக்காவிட்டால் நீங்கள் இம்முறை ஒரு ஆசனத்தை பெறுவதும் கஷ்டமாக இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மூன்று ஆசனங்களை தட்டி விட்டு செல்வார்கள் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செல்ல போகின்றது என்று எல்லாம் கூறினார்கள்.
ஆனால் கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மூளை முடுக்குகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக நின்றதன் காரணமாக என்னுடைய மனதில் தெரிந்திருந்தது.
நாங்கள் மட்டக்களப்பில் நிச்சயமாக நான்கு ஆசனங்கள் எடுக்கக்கூடிய அளவில் எமது ஆதரவு இருக்கின்றது என்பது எனக்கு தெரிந்து விடயம்.
நான்காவது ஆசனத்தை இழந்தது வெறும் 8000 வாக்குகளினால். நான்காவது ஆசனம் பெறுவதற்கும் சில வழிகள் காணப்பட்டது.
சில இடங்களுக்கு சென்று சாணக்கியனுக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று கூறியதனால் தான் அந்த இடத்திற்கு நான் சென்று இல்லை எனக்கு வாக்களிக்க வேண்டும் என நியாயப்படுத்தியதனால் வெளியில் இருக்கின்ற வாக்காளர்களை உள்ளே கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டது.
கடந்த தேர்தலில் ஒரு கட்சி ஐந்து மாவட்டங்களிலும் போட்டி போட்டு கிட்டத்தட்ட 50 வேட்பாளர்கள் சேர்ந்து 65,000 வாக்குகள் தான் பெற்றார்கள்.
நான் மட்டக்களப்பில் தனித்து நின்று அதைவிட 200 வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கின்றேன்.
இம்முறை மக்களின் மனநிலையை கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், கற்பழித்தவர்கள், கப்பம் வாங்கியவர்கள், தரகு வாங்கியவர்கள், மண் கடத்தியவர்கள் இவர்கள் அனைவரையும் நிராகரிக்க வேண்டும் என்று.
மக்கள் ஒரே அடியாக மட்டக்களப்பில் பார்த்தீர்கள் என்றால் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா, ஜனா, துறைரெட்னம் இவ்வாறு பெரிய பெயர்கள்.
இவர்கள் எல்லாம் 30 வருடங்களாக இந்த பிரதேசத்தில் பேசப்பட்ட பெயர்கள் முழு பெயரையும் மக்கள் துரத்தி விட்டார்கள்.
எமது கட்சியிலும் மூன்று ஆசனம் கிடைக்கப்பெற்றது எனது வாக்குகளினால் எமது கட்சியிலும் எனக்கு 65,000 வாக்குகள் எனக்கு அடுத்ததாக இருந்தவருக்கு 22,000 வாக்குகள் எனக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குகள் கிடைக்கப்பெறாமல் இருந்திருந்தால் எமது கட்சியிலும் ஒரு ஆசனம் தான் கிடைக்கப்பெற்றிருக்கும். ’’என்றார்.