EnTamil.News
F Y T

மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

நிரோ - 2 வாரங்களிற்க்கு முன்பு (2024-12-03)
இராமநாதன் அர்ச்சுனா
இராமநாதன் அர்ச்சுனா

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எதிர்கட்சித் தலைவர்களின் செயலாளருக்கு முன்பாக அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதுடன், நாடாளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை உதிர்த்ததாகவும் SJB நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.​​

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது நாடாளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக அர்ச்சுனா கூறினார்.


"நாடாளுமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், நாங்கள் எப்படி தெருவில் நடமாட முடியும்?' என்றும் அருச்சுனா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவைத் தலைவர் எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எதிர்கட்சித் தலைவர்களின் செயலாளருக்கு முன்பாக அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதுடன், நாடாளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை உதிர்த்ததாகவும் SJB நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார். அதேவேளை அருச்சுனா எம்பி சுமத்திய குற்றசாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, நிராகரிப்பதாகவும், அர்ச்சுனாவே தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.