EnTamil.News
F Y T

இந்திய பிரதமரை இலங்கைக்கு அழைத்துள்ள ஜனாதிபதி

நிரோ - 3 வாரங்களிற்க்கு முன்பு (2024-12-16)
இந்திய பிரதமரை இலங்கைக்கு அழைத்துள்ள ஜனாதிபதி

இலங்கையின் நிதி நெருக்கடியின் போது இந்தியா அளித்த உதவியை நினைவு கூர்ந்த திசாநாயக்க, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

இலங்கைக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கையின் அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இந்தியா எப்போதும் இலங்கைக்கு உதவி வருகிறது என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை நாடு மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது என்றும் திசாநாயக்க கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த விடயங்களை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில், இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், இலங்கை மண்ணை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று தாம் இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்துள்ளதாகவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.


இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும், மேலும் இந்தியாவுக்கான தொடர்ச்சியான ஆதரவை தாம் உறுதிப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் ஒரு தொற்றுநோயாக மாறியுள்ள கடற்றொழிலாளர்; பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண இலங்கை விரும்புவதாகவும் திசாநாயக்க கூறியுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்களால், அடிமட்ட இழுவை படகு முறைகள் செயற்பாட்டில் உள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், ஏனெனில் அது இந்தத் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும், என்று திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் நிதி நெருக்கடியின் போது இந்தியா அளித்த உதவியை நினைவு கூர்ந்த திசாநாயக்க, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.


இதன்போது, அதிலிருந்து வெளியேற இந்தியா, இலங்கைக்கு மிகுந்த ஆதரவளித்தது. அதன் பிறகு, குறிப்பாக கடன் இல்லாத கட்டமைப்பு செயல்பாட்டில் இலங்கைக்கு பெரிதும் உதவியது.

இந்தநிலையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அநுரகுமார, பிரதமர் மோடி, இலங்கைக்கு முழு ஆதரவை உறுதி செய்துள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.