EnTamil.News
F Y T

சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட இருக்கும் அமைச்சர்களின் வீடுகள்

நிரோ - 1 நாள் முன்பு (2024-12-21)
சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட இருக்கும்  அமைச்சர்களின்  வீடுகள்

அதற்காக புராதன மதிப்புகள் கொண்ட அமைச்சர் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்களின் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அதற்காக புராதன மதிப்புகள் கொண்ட அமைச்சர் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


இதற்காக சொகுசு வீடுகள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தெந்த அமைச்சகங்கள் அந்த அமைச்சர் வீடுகளுக்கு சொந்தமானவை, அந்த வீடுகளுக்கு சொந்தமான சொத்துக்கள் என்ன என்பது உட்பட பல விடயங்கள் இங்கு காணப்படுகின்றன.

!அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளை தொடர்ந்தும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட சொகுசு வீடுகளின் எண்ணிக்கை 35 ஆகும்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.