EnTamil.News
F Y T

நாட்டில் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை - மூவரிடம் வாக்குமூலம் பதிவு

நிரோ - 1 நாள் முன்பு (2024-12-21)
நாட்டில் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை - மூவரிடம் வாக்குமூலம் பதிவு

தான் பெற்றிராத ‘கலாநிதி’ பட்டத்தை நாடாளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் தவறாக குறிப்பிட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (20) நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து நாடாளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் உட்பட மூன்று அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தான் பெற்றிராத ‘கலாநிதி’ பட்டத்தை நாடாளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் தவறாக குறிப்பிட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.