EnTamil.News
F Y T

வருட இறுதியில் நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

நிரோ - 1 நாள் முன்பு (2024-12-21)
https://jvpnews.com/article/40-000-police-officers-to-be-deployed-islandwide-1734787343
https://jvpnews.com/article/40-000-police-officers-to-be-deployed-islandwide-1734787343

மற்றும் 769 ஆய்வு தர அதிகாரிகளும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான பொலிஸார்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 40 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் நடமாடும் இடங்களில் சீருடை அணிந்த அதிகாரிகளுக்கு மேலதிகமாக 500 இற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இது தவிர, புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பணிகளை மேற்பார்வையிட 48 மூத்த அதிகாரிகள் மற்றும் 769 ஆய்வு தர அதிகாரிகளும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.