எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை (10) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
தமது கட்சியான ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதால் இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி கட்சி கடந்த வருடம் மே மாதம் 22 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தமிட்டு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக செயற்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.