EnTamil.News
F Y T

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-10-23)
Johnston Fernando
Johnston Fernando

இதன்போது அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான முன்னாள் அமைச்சர்ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

இதன்போது பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயாரென நேற்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.