வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், அவருக்கு காய்ச்சல் குணமடையாததால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் (16-12-2024) மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிகாய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அவருக்கு அங்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.