EnTamil.News
F Y T

கச்சதீவு தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடலை மறுக்கும் முன்னாள் அமைச்சர்

நிரோ - 1 வாரத்திற்க்கு முன்பு (2024-12-26)
கச்சதீவு தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடலை மறுக்கும் முன்னாள் அமைச்சர்

கச்சதீவை இந்திய அரசாங்கம் தங்களுடைய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றது

இலங்கை இந்தியா இடையே கச்சதீவு தொடர்பான சர்ச்சையானது நீண்ட நாள் பிரச்சினையாக காணப்படுகின்றது

அந்த வகையில் கச்சத்தீவு பகுதியானது இலங்கைக்கு சொந்தம் என்றும் இது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் இந்தியாவுடன் தேவை இல்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்


முன்னதாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது


கலந்துரையாடல் ஒன்றுக்கு தயாராகுவதாக இருந்தால் இந்தியா அது தொடர்பான முறைப்படியான வேண்டுகோள் ஒன்று விடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்


இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான அம்சமே கச்சதீவு இது இலங்கைக்கு மட்டுமே சொந்தமானது எனவே இது தொடர்பில் இந்தியாவுடன் எந்தவித பேச்சு வார்த்தையும் தேவையில்லை


கச்சதீவை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதற்காக விடுக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவையும் இலங்கைக்கு கிடையாது


கச்சதீவை இந்திய அரசாங்கம் தங்களுடைய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றது இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.