இலங்கையில் கோடாபய ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்திற்கு எதிராக 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்திற்கு பிற்பாடு கிட்டத்தட்ட 6 ஆயிரம் அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட காரணங்களுக்காக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று மற்றும் விலகி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது
இந்த விடயம் தொடர்பில் பெப்ரல் அமைப்பினுடைய நிறைவேற்று பணிப்பாளரின் கருத்தானது
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரகலய மக்கள் போராட்டத்தின் பின்னர் பல அரசியல்வாதிகள் நம்பிக்கையை இழந்து அரசியலில் இருந்து விலகி போயுள்ளனர்
இந்த அரசியல்வாதிகளில் 2000 பேர் நாட்டையும் விட்டு வெளியேறி இருக்கின்றனர்
அது மாத்திரமின்றி புதிய கட்சிகளை உருவாக்குதல் ஏனைய கட்சிகளுடன் இணைதல் போன்ற பல்வேறு காரணங்களினால் 30 அரசியல் கட்சிகள் தற்பொழுது செயலிழந்து விட்டதாகவும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது வேட்பு மனுக்கள் கூறப்பட்ட நிலையில் அதில் 80 ஆயிரத்திற்கு அதிகமான வேட்பாளர்கள் தோற்று இருந்தனர் அப்போது அதிக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் இப்போது இல்லை என்றும் தெரியவந்துள்ளது இன்று அவர் தெரிவித்துள்ளார்