புங்குடு தீவு போலீசார் தங்களுடைய கடமையை சரியாக செய்வது இல்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
புங்குடு தீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு அருகில் பல்வேறு விதமான குற்ற செயல்கள் நாள்தோறும் இடம்பெறுவதாகவும் இது குறித்து போலீசாருக்கு அறிவித்தல் வழங்கியும் இதுவரை காலமும் அதற்கு ஏற்ற வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
குறித்த பகுதியில் மாடுகளை சட்ட விரோதமாக திருடி இறைச்சிக்காக கொலை செய்தல் கசிப்பு உற்பத்தி என பல்வேறுபட்ட குற்ற செயல்கள் குறித்த பாடசாலைக்கு அருகாமையில் இடம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து குறிகட்டுவானில் இயங்கும் உப போலீஸ் நிலையத்திற்கு பல தடவைகள் முறைப்பாடு செய்தும் இந்த குற்ற செயல் தொடர்பில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை
இந்நிலையில் போலீசாருக்கும் குற்றச் செயல்களுடன் ஈடுபடும் நபர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்
அருகாமையில் பாடசாலை அமைந்துள்ளதால் அங்கு மாணவர்களின் உடைய கல்விக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைஉருவாகி இருப்பதாகவும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பயமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் அது மாத்திரமன்றி பெண்களுக்கு பாதுகாப்புஅற்ற நிலைமையும் அங்கே ஏற்பட்டுள்ளதாகவும் எனவே போலீசார் இது தொடர்பில் கவயீனமாக செயல்படுவதாகவும் இதற்கு சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்