யாழில் அமைந்துள்ள பிரபல முருகன் ஆலயத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடந்துள்ளது குறித்த ஆலயத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரை ஒரு நபர் இரக்கமின்றி தாக்கும் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வருகிறது ஆலயத்தின் கட்டிட வேலைகளில் ஈடுபட்டிருந்த மேசன் ஒருவர் மீது இந்த இறக்கமற்ற தாக்குதல் இடம் பெற்றுள்ளது
குறித்த நபர் அந்த தொழிலாளி மீது மண்வெட்டியால் தாக்குதல் நடத்திய காட்சிகளை இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது இந்த காணொளிக்கு பலர் விசனம் தெரிவித்துள்ளனர்
குறித்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அங்கே ஆலயத்திற்கு வந்தவர்கள் ஆலயவளாகத்தில் நின்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர அதை தடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை என்றும் இந்த காணொளியை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் குறித்த காணொளி தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாக்கப்பட்ட வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்