உலகையே உலுக்கி இருக்கும் தென் கொரியா விமான விபத்துக்கு இலங்கை தரப்பில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்கொரியாவின் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் 179 பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து தென்கொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் ஆனது தனது இரங்கலை தெரிவித்துள்ளது
இலங்கைவெளிவிவகார அமைச்சு குறித்த சம்பத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பில் ஆழ்ந்த வருத்தம் அடைவதாக தனது உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயங்களாக
" இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது இந்த துக்க சம்பவத்தை சமாளிக்கும் தைரியம் அவர்கள் பெறட்டும் மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் நாம் அதற்காக பிரார்த்திக்கின்றோம் "என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது
தென் கொரியா விமானம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சித்தபோது விபத்திற்கு உள்ளானதில் 181 பேரில் இருவரை தவிர ஏனையவர்கள் உயிரிழந்தது உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது