யாழ்ப்பாணம் பருத்தித்துறை வழித்தடத்தில் வீதி விதிமுறைகளை மீறி பயணிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் பேருந்தை செலுத்திய உரிமையாளரின் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக வடமகான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் வட மாகாண ஆளுநருக்கு அறிவித்துள்ளார்
தனியார் பேருந்து ஒன்று மேற்படி விடயத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வருகிறது பேருந்தானது பயணிகளையும் பொது மக்களையும் பயமுறுத்தும் வகையில் வீதி நடைமுறைகளை மீறி பயணித்துள்ளது
இந்த காணொளிகள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இதனைத் தொடர்ந்து குறித்த சாரதியின் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது