EnTamil.News
F Y T

குழந்தையைப் பெட்ரோல் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்

நிரோ - 3 நாட்கள் முன்பு (2025-01-01)
குழந்தையைப் பெட்ரோல் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்

39 வயதுடைய தாயும் 2 வயதும் 9 மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது

பிந்துன்கட பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தனது குழந்தையை கொன்றதுடன் அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


குறித்த சம்பவம் தொடர்பில் தலவா போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் கீழ் நேற்றைய தினம் 31ஆம் தேதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன


முதற்கட்ட விசாரணைகளில் குறித்த தாயார் குழந்தையின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தனது உடலிலும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது


39 வயதுடைய தாயும் 2 வயதும் 9 மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது


குறித்த உயிரிழந்த தாய் பிந்துன்கட பிரதேசத்தில் உள்ள மகளிர் சங்கத்தின் பொருளாளராக கடமையாற்றி வந்தார் என்பதும் பிரதேசவாசிகளால் தெரிவிக்கப்படுகிறது


ஆகவே அவருக்கு ஏற்பட்ட பணப்பிரச்சனை காரணமாக குழந்தையையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார் இரு சடலங்களும் தற்பொழுது அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது இது தொடர்பான விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.