திருகோணமலை கடற்பரப்பிற்கு அருகில் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் ஆளில்லா விமானத்தினால் இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு சமர்பித்த இறுதி அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆளில்லா விமானம் தொடர்பில் உறுதி செய்யப்பட்ட அறிக்கை இலங்கை விமானப்படை தளபதி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மீனவர்களின் குழுவால் திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா ட்ரோன் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது எனவும் இது பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இந்த ஆளில்லா விமானமானது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இரண்டு வாரங்கள் கடலில் மிதந்து கொண்டு இருந்ததும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
எனவே இந்த ஆளில்லா விமானத்தினால் இலங்கையின் பாதுகாப்பிற்கு பிரச்சனையோ அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்தாது எனவும் நாட்டில் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் அது இல்லை எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது