EnTamil.News
F Y T

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இடம் CID விசாரணை

நிரோ - 4 நாட்கள் முன்பு (2025-01-02)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இடம் CID  விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வதிவிடங்களுக்கு சென்று வாக்குமூலங்களை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரிடம் குற்றப் புணலாய்வுத் திணைக்களம் விசாரணைகளை நடத்துவதற்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது


கடந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பான சர்ச்சை இன்று வரையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

மருந்து இறக்குமதியின் போது அவரால் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமரிடம் விசாரணைகள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது


தற்பொழுது இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க இலங்கை திரும்பியவுடன் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்று புலனாய்வு திணைக்களம் தயாராகி வருவது தெரிய வருகிறது இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வதிவிடங்களுக்கு சென்று வாக்குமூலங்களை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.