EnTamil.News
F Y T

சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கை வைத்தியர்க்கு வெளிநாட்டில் 10 வருட சிறை தண்டனை

நிரோ - 2 நாட்கள் முன்பு (2025-01-04)
சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கை வைத்தியர்க்கு   வெளிநாட்டில் 10 வருட சிறை தண்டனை

52 வயதாகி இருக்கும்குறித்த வைத்தியர் இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்தியதற்காக அவருக்கு 10 வருடங்களும் 10 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


ஆஸ்திரேலியாவில் தோல் நிபுணராக பணியாற்றிய பிரதீப் திசாநாயக்கவிக்கு இவ்வாறு தண்டடை விதிக்கப்பட்டுள்ளது

52 வயதாகி இருக்கும்குறித்த வைத்தியர் இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்தியதற்காக அவருக்கு 10 வருடங்களும் 10 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


இவர் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி அங்கு மதங்கள் பற்றிய பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது இந்த நிலையில் குறித்த நபர் ஒரு சிறுமியை ஐந்து தடவைகள் தகாத முறைக்கு உட்படுத்தியதாகவும் மேலும் 16 வயதிற்கு குறைந்த மற்றுமொரு சிறுமியை இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது


குறித்த வைத்தியரு பிரதீப் தான் செய்த அனைத்து குற்றங்களையும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டு உள்ளார் இருப்பினும் அவர் மதத்தின் அடிப்படையில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


இவ்வாறான நிலையில் அவருக்கு 10 வருடம் சிறை விதிக்கப்பட்டுள்ளது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.