தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டுகளில் ஒன்றாக இன்று வரையிலும் திகழ்ந்துவரும் ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்
ஜல்லிக்கட்டுக்கு பேர் போன இடமாக இருக்கின்ற இந்தியாவின் தமிழகத்தில் வருடத்திற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் ஆரம்பம் ஆகிறது குறித்த ஜல்லிக்கட்டு ஆனது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியிலேயே பிரம்மாண்டமாக ஆரம்பமாகியுள்ளது
இவ் ஜல்லிக்கட்டு போட்டி களுக்காக கிட்டத்தட்ட 600 காளைகளும் 320 க்கு மேல் மாடு பிடி வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்