உலகில் தற்பொழுது அதிகம் பரவி வரும் சுவாச நோய் தொடர்பான பரவல் குறித்து இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அண்மைய காலங்களில் வடக்கு சீனாவில் குறிப்பாக சிறுவர்கள் இடையில் சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரித்து இருப்பதாக ஊடக அறிக்கைகளில் தெரிய வருகின்றது
இம்ப்ளூவெண்ட்ஸா சுவாச ஒத்துசைவு வைரஸ் மற்றும் மனித மெட்டாப் நியூ வைரஸ் போன்ற பொதுவான வைரஸ்களாலயே ஏற்படுகின்றது என்பதை சீனாவின் சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது
இந்த விடயம் தொடர்பில் வித்தியாசமான நோய்க் கிருமிகள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை
இப்போது பரவி வருகின்ற இந்த நிலைமை ஆனது எதிர்பார்த்த ஒன்று என்றும்
இது தற்பொழுது பரவும் வேகம் அதிகரித்து இருப்பதாகவும் முன்னைய ஆண்டுகளை விட இது கடுமையானது என்றும்
இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த நோய் தொடர்பில் யாரும் அச்சப்படவோ அல்லது கவலைப்படவோ எந்த காரணமும் இல்லை என்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது