நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலைக்கு பின்பு எலிகாச்சல் பரவலானது வடக்கு மாகாணத்தை அதிகம் பாதித்திருக்கிறது
அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு வவுனியாவில் 41 பேருக்கு எலிக்காச்சல் நோய் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உறுதி செய்துள்ளது
வவுனியா மாவட்டத்தை பொருத்தவரையில் அங்கு சிறுபோகம் மற்றும் பெறுபோகம் போன்ற நெற் பயிர்ச்செய்கை காலங்களில் எலிகாச்சல் தொற்று குறிப்பிட்ட அளவு பதிவாகி இருக்கின்றது இருப்பினும் கடந்த 2024 மற்றும் 2025 தொடக்கத்தில் 41 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது