இலங்கையில் கடந்த கால அரசுகள் போல் தாம் ஊடகங்களை ஒருபோதும் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்க மாட்டோம் என அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
இது குறித்து ஊடகங்களிடம் அவர் கூறும் பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஊடகம் என்பது நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் செய்திகளை வெளியிடுவதற்கு முழு உரிமையை கொண்டது ஒரு ஜனநாயக நாட்டில் அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது இலங்கையில் கடந்த ஆட்சிக் காலங்களில் படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி அனுர அரசில் பெற்றுக் கொடுக்கப்படும்
ஊடகவியலாளர்களுக்கான நீதியை எதிர்பார்த்து அவர்களது குடும்பம் அனுபவிக்கும் வேதனையும் வலியும் எமக்கு தெரியும்
இந்த நாட்டில் ஊடகங்களை அடக்கி ஆட்சியை செய்ய முடியாது முன்னைய காலங்களில் அவ்வாறு ஆட்சி செய்த அரசுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்