இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் ரஷ்யாவினுடைய ராணுவத்தில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இன்றைய தினம் இடம்பெற்று இருந்த குறித்த போராட்டம் கொழும்பு வெளி விவகார அமைச்சுக்கு முன்பதாக நடத்தப்பட்டுள்ளது
இதன் போது தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
குறித்த தாயினுடைய சகோதரன் அவருடைய மகனை பெல்ஜியத்துக்கு அனுப்புவதற்கு உதவி செய்வதாக கூறி தங்களை ஏமாற்றி ரஷ்யாவிற்கு மகனை அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார்
மேலும் ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகன் ராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு பின்பு ரஷ்யாவினுடைய ராணுவத்தில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து கவலை வெளியிட்டுள்ளார்
எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்