இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோட்டாபய வின் ஆட்சி காலத்தில் இலங்கை என்றும் சந்திக்காத பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது
பாரிய மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க இந்த வரிசை யுகத்தை இல்லாதொழித்தார்
மீண்டும் அநுரவினுடைய அரசாங்கத்தில் அரிசிக்கான தட்டுப்பாடு தேங்காய் தட்டுப்பாடு பொருட்களின் விலை அதிகரிப்பு இலங்கையில் மீண்டும் வரிசை யுகத்தை ஆரம்பித்துள்ளது
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் தேங்காயின் விலை உயர்வு மற்றும் தேங்காய்க்கு நிலவும் தட்டுப்பாடு என்பன மிக நீண்ட வரிசையை ஆரம்பித்திருந்தது
மேலும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலை உயர்வு அரிசிக்கான தட்டுப்பாடு என்பதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அந்தவகையில் இன்றைய தினம் சிகப்பு அரிசியை பெற்றுக் கொள்வதற்காக அம்பலாந்தோட்டை மக்கள் வரிசையில் நின்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது ஒரு கிலோகிராம் அரிசி 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில்ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் அரிசியை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் நின்றதாக தெரிய வருகின்றது
மேலும் அங்கு வரிசையில் நீண்ட நேரம் அரிசிக்காக காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்