எதிர்வரும் 25ஆம் திகதி தமிழ் தலைவர்கள் இணைந்து முக்கிய சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாக அறிய முடிகின்றது
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனுடனும் செல்வம் அடைக்கல நாதனுடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்போன்று நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது
இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் பொழுது
இந்த சந்திப்பின்போது தாங்கள் மூன்று தரப்பினரும் சேர்ந்து பொதுவான சந்திப்பிற்கு இணக்கப்பாடு எட்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்
எனவே எதிர் வருகின்ற 25 ஆம் தேதி முக்கியமான மூன்று தமிழ் கட்சிகளும் பொதுவான ஒரு சந்திப்பை நடத்த இருப்பதாக கஜேந்திரகுமார் மேலும் கூறியுள்ளார்
அனுராவின் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படுகின்ற புதிய அரசியல் அமைப்பு பணிகள் இடம்பெறும் போது தமிழ் கட்சிகள் இணைந்து புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய தீர்வு திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க இருப்பதாகவும் கதிந்திரகுமார் இதன்போது தெரிவித்துள்ளார்
இவ்வாறான ஒரு நிலையில் தமிழ் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில்சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கல நாதனுடன் சந்திப்பு ஒன்றை நடத்தி இருப்பதும் தெரிய வருகிறது