யாழ்ப்பாணத்தில் மது போதையில் சைக்கிள் ஓட்டியவருக்கு தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் மது போதையில் தனது சைக்கிளை செலுத்தி சென்ற போது அவரை அச்சுவேலி பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து மது போதையில் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் அவர் மீது மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவருகின்றது
இந்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த நபர் தன் மீது குற்றம் உள்ளதை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்த நீதிமன்றம் அவருக்கு 25,000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
தற்போது இலங்கையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் போக்குவரத்து விதிகளில் பலவிதமான மாற்றங்களும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது