பாடசாலை மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து உள்ள சம்பவம் ஒன்று வெல்ல வாய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் நேற்றுக்கு முந்தினமான புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்
பாடசாலை விதிமுறைகளுக்கு அமைய மாணவனின் தலைமுடியை வெட்டுமாறு தாயாரிடம் பாடசாலையினால் அறிவுறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தாய் மாணவனின் தலைமுடியை சிறிதளவு வெட்டியுள்ளதாக தெரிய வருகிறது
இதன் போது குறித்த தாய்க்கும் மாணவனுக்கும் இடையே முரண்பாடு நிலை ஏற்பட்டு மாணவன் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பான மேலதிக விசாரிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்