EnTamil.News
F Y T

இலங்கையில் குறைவடைந்துள்ள பிறப்பு வீதம் - வைத்தியர் வெளியிட்டுள்ள தகவல்

நிரோ - 22 மணித்தியாலங்களுக்கு முன்பு (2025-01-10)
இலங்கையில் குறைவடைந்துள்ள பிறப்பு வீதம்  - வைத்தியர் வெளியிட்டுள்ள தகவல்

உடல் பருமன் மந்த போசணை போன்ற உடலியல் நோய்களாலும் சிறுவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகுவதும் அதிகரித்து உள்ளது என்றும் வைத்தியர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளை விட தற்பொழுது மெல்ல மெல்ல பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளதாக கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்


இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்


கடந்த 2013 மூன்றை விடவும் 2023 பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும்

2013 இல் பிறப்புக்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 50 ஆயிரம் ஆக இருந்ததாகவும் இது 2023 இது 2லட்சத்து 50 ஆயிரம் ஆக குறைவடைந்து இருப்பதாகவும்

2024 இது 2 லட்சத்து 28 ஆயிரம் ஆகக் குறைவடைந்தும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்


மேலும் இலங்கையில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நீரழிவு நோய் இனம் காணப்படுவதும்

மற்றும் உடல் பருமன் மந்த போசணை போன்ற உடலியல் நோய்களாலும் சிறுவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகுவதும் அதிகரித்து உள்ளது என்றும் வைத்தியர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.