EnTamil.News
F Y T

தைப்பொங்கல் கொண்டாடுவதற்கு அரிசி இல்லை வீதிக்கு வந்து வர்த்தகர்கள் போராட்டம்

நிரோ - 22 மணித்தியாலங்களுக்கு முன்பு (2025-01-10)
தைப்பொங்கல் கொண்டாடுவதற்கு அரிசி இல்லை  வீதிக்கு வந்து வர்த்தகர்கள் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நெருங்கி வருகின்ற பொழுது வீடுகளில் பொங்கல் பொங்குவதற்கு சிகப்பு அரிசி உட்பட அரிசி வகைகள் தேவைப்படுகின்றன ஆனால் இப்பொழுது நாட்டில் அவ்வாறான அரிசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது

இலங்கையில் தற்பொழுது கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களில் தைப்பொங்கல் வருகின்ற காரணத்தினால் அனுரகுமார திசாநாயக்கவின் உடைய அரசாங்கம் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கரபத்தினை நகரில் வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்


அரிசிக்கு நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விலையினால் உரிய வகையில் நுகர்வோருக்கு அரசியல் விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சிறிய வர்த்தகர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நெருங்கி வருகின்ற பொழுது வீடுகளில் பொங்கல் பொங்குவதற்கு சிகப்பு அரிசி உட்பட அரிசி வகைகள் தேவைப்படுகின்றன ஆனால் இப்பொழுது நாட்டில் அவ்வாறான அரிசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது


கட்டுப்பாட்டு விலைக்கு எங்களுக்கு அரிசி வழங்கப்படுகின்றது கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் வர்த்தகர்கள் கொழும்பிலிருந்து அரிசியை கொண்டு வருவதாக இருந்தால் போக்குவரத்து கட்டணம் சுமை தாங்கிகளின் கட்டணம் என பல விடயங்கள் இருக்கின்றன எனவே இன்றைய காலகட்டத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியாத ஒரு சூழல் உள்ளது


எனவே நாட்டில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும் அரிசிக்கான தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.